உலகம் முழுவதும் நடக்கும் குற்ற சம்பவங்களுக்கு அடிப்படை காரணமாக இருப்பது போதை பழக்க வழக்கங்கள் தான். ஏன் இந்த மனித இனத்துக்கே சவாலாக இருப்பது மது பழக்கமும், புகை பழக்கமும், கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்கள் தான்.
இதனை கற்றுத்தருவது கூட இருக்கும் நண்பர்கள் தான் என்றாலும், உலகம் முழுவதும் இந்த பழக்கவழக்கங்களை மக்களிடம் எடுத்து கொண்டு சென்றதில் திரைத்துறைக்கு முக்கிய பங்கு உண்டு.
சினிமாவில் ஹீரோவின் அறிமுகத்தின் போதும், வில்லனின் கொடூரத்தை காட்டவும் புகை பிடிப்பது, மது குடிப்பது போன்ற காட்சிகளை வைத்து விடுகின்றனர். இதனை பார்க்கும் இளைஞர்கள், தான் நல்லவன் என்பதையும், தான் ஒரு கேடுகெட்டவன் என்பதையும் இந்த சமூகத்திற்கு வெளிப்படுத்த இந்த பழக்கங்களுக்கு ஆளாகின்றனர்.
ஒரு காலத்தில் திரைப்படங்களில் பெண்களை பற்றி தப்பாக பேச கூட அச்சப்படுவார்கள், ஆனால் தற்போது இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத காட்சிகளை பார்ப்பதே அரிதாகிவிட்டது. அதிலும் சமீபத்தில் வெளிவந்த ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற திரைப்படத்தை தமிழக இளைஞர்களை அடுத்த கட்ட ரசனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதுபோன்ற திரைப்படங்களால் பெண்கள் போதை பொருளாக பயன்படுத்த திணித்து வருகின்றனர். பெண்களை தெய்வமாக போற்றும் தமிழ் சமுதாயத்தை இப்படி மாற்ற இவர்களுக்கு இன்னு ஒரு இரு வருடங்களே போதுமானது.
கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே காதல் செய்துவந்த வேளையில், தற்போது சினிமாவில் பள்ளியில் காதல் செய்வதுபோல் காட்சிகள் அமைத்து, பள்ளி மாணவர்களையும் காதல் செய்ய பழக்கி வருகின்றனர்.
அறிவு சார்ந்த தமிழ் சமுதாயம் இந்த மண்ணில் ”இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற திரை படத்தை வெளியிட்டிருக்கவே கூடாது. ஆனால் மாறாக அதனை வெற்றி படமாக்கி அடுத்து இதுபோன்ற ஒருபடத்தை தயாரிக்க தூண்டியுள்ளது இந்த சமுதாயம். என்று சமூக ஆர்வலர்கள் வேதனை அடைகின்றனர்.
இப்படியிருக்க, தமிழகத்தில் சினிமாவை புறக்கணிக்கும் அரசியல் கட்சியாக கருதப்படும் பாமக, மேல் சொன்ன அனைத்திற்கும் எதிராக குரல் கொடுத்துள்ளது. முக்கியமாக ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற கீழ்த்தரமான ஒரு படத்தையும் கண்டிக்க மறக்கவில்லை. அந்த படத்தை தமிழகத்தில் எந்த அரசியல் கட்சியும் எதிர்க்கவில்லை என்பது வேறு கதை.
இந்நிலையில், பாமகவின் அன்புமணி ”நான் சினிமாவிற்கு எதிரானவன்” என்று வெளியான தகவலை அன்புமணி மறுத்து விளக்கம் அளித்துள்ளார்.
”கரம் கோர்ப்போம்., பாலாற்றை பாதுகாப்போம்” என்ற விழுப்புணர்வு பிரச்சாரம் முடிந்து வேலூரில் நடந்த பொதுக் கூட்ட மேடையில் பேசிய, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறுகையில், ”சினிமா நடிகர்களின் கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகமும், பீர் அபிஷேகமும் செய்வதை கடுமையாக எதிர்க்கிறேன்.
ஆனால் நான் சினிமாவவை எதிர்க்கவில்லை.சினிமா கலாசாரத்தை தான் எதிர்க்கிறேன். மது குடிப்பதையும், புகை பிடிப்பதையும் முழுமையாக எதிர்க்கிறேன். நான் சினிமாயே எதிர்ப்பதாக வெளியான தகவல் உண்மை இல்லை” நிறைய நல்ல படங்களை பாராட்டி அதில் நடித்த நடிகர்களுக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளேன்” என்று பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.