அமைதிக்கான நோபல் பரிசு.! மோடியின் பெயர் பரிந்துரை.!

பிரதமர் மோடி சுதந்திரத்தினதன்று செங்கோட்டையில் ‘ஆயுஷ்மான் பாரத்’ என்ற மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அறிவித்தார்.

இதுபற்றி அவர் பேசுகையில், “உலகின் மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டு திட்டமாக ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தை அறிமுகம் செய்யப்போகிறோம். இதன் மூலம் நாட்டில் உள்ள 10 கோடி ஏழை குடும்பங்கள் பலன் அடையும்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையில் மருத்துவ காப்பீடு வசதி அளிக்கப்போகிறோம். இதன் மூலம் 50 கோடி பேர் மருத்துவ காப்பீட்டு பலன் பெற முடியும்” என்று குறிப்பிட்டார்.

நேற்று பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தை ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி நகரில் தொடங்கி வைத்தார். மேலும் பிரபாத் தாரா மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பயனாளிகள் சிலருக்கு ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் சுகாதார அட்டைகளையும் வழங்கினார்.

இந்தநிலையில், 2019-ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு விருதுக்கு பிரதமர் மோடியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டத்தை தொடங்கியதற்காக பிரதமர் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழிசை தெரிவித்துள்ளார்.