கேரள மாநிலத்தில் மீண்டும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆண்டு கேரளாவில் கனமழை காரணமாக வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. அதை ஒட்டி பலர் வீடிழந்தனர். பல இடங்களில் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. சுமார் 35 க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தனர். நாட்டையே இந்நிகழ்வு உலுக்கியது.
தற்போது மழை நின்றதால் கேரள மாநிலம் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இன்று வானிலை ஆய்வு மையம் கேரள மாநிலத்துக்கு எச்சரிக்கை ஒன்றை அளித்துள்ளது. அதன்படி நாளை மற்றும் அதற்கு அடுத்த நாஅள் மீண்டும் கனமழை பெய்ய உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த கன மழை கேரள மாநிலத்தில் பட்டினம்திட்டா, இடுக்கி திருச்சூர் மற்றும் வயநாடு உள்ளிட பல மாநிலங்களில் கடுமையாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்கலில் சுமார் 64 முதல் 124 மிமீ மழை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்தை உடனடியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வானிலை ஆய்வு மையமும் மாநில அரசும் கேட்டுக் கொண்டுள்ளது. ஏற்கனவே கனமழையின் காரணமாக கேரளா மாநிலம் முழுவதுமே வெள்ளக் காடானது. இந்நிலையில் மீண்டும் கனமழை குறித்த அச்சுறுத்தலால் மக்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.