புனித பூமியில் நிர்வாணமாக நின்று படத்திற்கு போஸ் கொடுத்த இளைஞர்கள்…..!

இலங்கையில் புனித பூமியாகக் கருதப்படும் சீகிரியாவில் நாகரீகமற்ற முறையில் நடந்து கொண்ட இளைஞர்கள் குறித்து சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

இளைஞர்கள் சிலர் பிதுரங்கல கல் மீது எரி, சீகிரிய பூமியை நோக்கி நிர்வாணமாக நிற்கும் புகைப்படங்கள் சில ஊடகங்களில் வெளியாகியுள்ளன.குறித்த புகைப்படத்தை எடுத்த இளைஞர்கள் அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

அரை நிர்வாணமாக எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டமையினால் பாரிய சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது.புனித பூமியை அவமதிக்கும் வகையில் செயற்பட்டவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவர்களை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு பிதுரங்கல ரஜமஹா விகாரையின் விகாராதிபதி தானியகம ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய குறித்த இளைஞர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.