ஓ. பன்னீர்செல்வத்தின் பதவி பறிபோகுமா இன்று?? அதிர்ச்சியில் அதிமுக!

ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் செய்யக்கோரி டிடிவி தினகரனின் ஆதரவாளர்களான தங்க தமிழ்செல்வன்,வெற்றிவேல் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அப்பொழுது ஓ. பன்னீர் செல்வம் உட்பட 11 பேர் அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

அவர்கள் 11 பேரும் அப்போதைய கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தனர். ஆனால் சபாநாயகர் தனபால் அவர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்யவில்லை. அதே சமயத்தில் ஆளுநரிடம் முதல்வருக்கு எதிராக கடிதம் கொடுத்த டிடிவி தினகரனின் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனையடுத்து 11 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரி டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் தங்க தமிழ்செல்வன்,வெற்றிவேல் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு இன்று வருகிறது.