எல்லோருக்கும் நன்றி! – மஹேலா ஜெயவர்தனே உருக்கம்

டுவிட்டரில் 1 மில்லியன் பாலோவர்கள் மஹேலா ஜெயவர்தனேவை பின் தொடரும் நிலையில் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் உலகின் ஜாம்பவானுமான ஜெயவர்தனே கிரிக்கெட் குறித்த கருத்துக்களை தொடர்ந்து டுவிட்டர் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.

இதோடு ரசிகர்களின் கேள்விகளுக்கும் டுவிட்டரில் அடிக்கடி பதில் அளிப்பதை ஜெயவர்தனே வாடிக்கையாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் டுவிட்டரில் ஜெயவர்தனேவை பின் தொடருபவர்களின் எண்ணிக்கை தற்போது 1 மில்லியனை தொட்டுள்ளது.

இது குறித்த ஜெயவர்தனேவின் பதிவில், நன்றி ஒரு மில்லியன் பாலோவர்ஸ், அடக்கமாக உணர்கிறேன் என பதிவிட்டுள்ளார்.