நாம் எவ்வளவு தான் இன்னல்களை சமாளிக்கக்கூடிய ஆளாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் நாம் அனைவரும் நாடி செல்வது இறைவனைத்தான். அப்படிப்பட்ட இறை சக்தியை நம்
வீட்டிற்குள் கொண்டுவருவதற்கான சில வழிமுறைகள் :
வீட்டில் சில செயல்களை செய்தால் தெய்வ சக்தி விலகிவிடும், சில செயல்கள் செய்தால் தெய்வ சக்தி கூடும் என சில கூற்றுகள் உள்ளன. அவற்றில் தெய்வ சக்தியை அதிகரிக்கும் சில செயல்கள் என்ன என்று பார்க்கலாம்.
வீட்டில் தெய்வ சக்தி அதிகம் இருந்தால் கெட்டது விலகும், நல்லது விளையும், யாருடைய கண் திருஷ்டியும், பில்லி சூனியமும், நம்மை ஒன்றும் செய்யாது.
புறா, குருவி போன்ற பறவைகள் மற்றும் அணில் போன்ற உயிரினங்கள் உங்கள் வீட்டிற்கு வந்தால், அவற்றை விரட்ட வேண்டாம். இவை நமது வீட்டிற்கு வந்து போனாலே நமக்கு நல்லது நடக்கும்.
ஆகவே, வீட்டில் அணில், சிட்டுக்குருவி, புறா, போன்ற பறவை, விலங்குகள் இருந்தால் தெய்வ சக்தி அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த உயிரினங்களுக்கு தெய்வ சக்தியை அறியும் ஆற்றல் உள்ளது என அறியப்படுகிறது.
நீங்கள் புதிதாக குடிப்போகும் வாடகை வீடு அல்லது சொந்த வீட்டிற்கு தெய்வ சக்தியினை கொண்டு வர ஜீவசக்தி கொண்ட ஏதாவது ஒரு உயிரினத்தை கொண்டு செல்ல வேண்டும். மனிதர்களை காட்டிலும் பறவைகளிடம் இந்த ஜீவசக்தியானது அதிகமாக உள்ளது.
உங்கள் வீட்டு வாசலில் நெற்கதிரை கட்டி தொங்கவிடுவதால் குருவி, புறா போன்ற பறவைகள் அதை உண்ண வந்து செல்லும். இந்த சந்தர்ப்பத்தில் அவை அங்கேயே கூடு கட்டி வாழ்ந்து குஞ்சு பொரிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
புறா, குருவி போன்ற ஜீவசக்தி கொண்ட ஜீவன்கள் கூடு கட்டினால் அதனை கலைக்கக்கூடாது. தெய்வ சக்தி கொண்டு வரும் திறன் கொண்டவை இவை என்பதால், இவற்றின் கூட்டை கலைப்பது, வீட்டிற்கு கெட்ட சகுனமாக அமையலாம்.
இறை சக்தியை நம் வீட்டிற்குள் கொண்டு வர ஏதேனும் ஒரு ஜீவராசியை வீட்டில் வளர்ப்பது தான் மிகச்சிறந்த செயலாகும்.