காவல் உதவி ஆய்வாளர் மகளை லாரி ஏற்றி கொலை.! கதறி அழுத ஆய்வாளர்.!!

சென்னை சவுக்கார்பேட்டை சேர்ந்த சிறப்பு காவல் ஆய்வாளர் துளசிங்கம். இவரது மகள் ரம்யா, அழகு நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று இரவு தனது பணியை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பிய பொது மினி வேண் மோதியதில் படுகாயமடைந்தார்.

இந்த விபத்தை கண்ட அங்கு உள்ளவர்கள் அவரை மீது அங்குள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது., ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு காரணமான வேண் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவரது தந்தை தனது மகள் ரம்யாவை அவரின் மாமனாரும், திரைப்பட சண்டை பயிற்சி கலைஞர் ரத்தினத்தின் மகனும் கொலை செய்து உள்ளதாக அவர் புகார் கூறியுள்ளார்.

மேலும் அவர்கள் சொத்து பிரச்சனை காரணமாகவே இந்த கொலை செய்யபட்டிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தனது மகளை இழந்த சோகத்தில் கண்ணீருடன் அவர் இந்த செய்தியை சக பணியாளர்களிடம் கூறி வழக்கு பதிவு செய்துள்ளார். காவல் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.