திமுகவினருக்கு அதிர்ச்சியளித்த திடீர் மரணம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் தொகுதி திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி.எஸ். வெங்கடேசன் இன்று காலமானார். அவர் உடல்நலக்குறைவால் சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.

இவர் 1996 முதல் 2001 திமுக ஆட்சி நடைபெற்ற போது அவர் காவேரிப்பட்டிணம் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். மேலும் அவர் திமுகவில் மாவட்ட அளவிலான பதவிகளை வகித்துள்ளார். அவருடைய மறைவிற்கு திமுகவினர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.