யாரு சாமி இவன்., இந்த அடி அடிக்கிறான்.!!

அரபு நாடுகளில் நடந்து வரும் ஆசிய கோப்பை போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி சூப்பர் 4 மூன்றாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

இந்த ஆட்டத்தின் போது யாரும் எதிர்பாராத விதமாக இந்திய அணியின் கேப்டனாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இறங்கியுள்ளார். தோனி ஒரு நாள் போட்டிகளில் இந்த போட்டியில் கேப்டன் ஆனதும் மூலம் இது அவர்க்கு 200 போட்டியாகும்.

இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அனைவருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ரோஹித், தவான், புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் அறிமுகமாக தீபக் சாகர் களமிறங்கியுள்ளார். வேகப்பந்துவீச்சாளர் கலீல் அஹமது மற்றும் இந்த தொடரில் இதுவரை வாய்ப்பு பெறாத லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே களமிறங்கியுள்ளார்கள்.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மொஹம்மத் ஷஷாத் அதிரடியாக ஆடி, இந்திய பந்து வீச்சாளர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

தற்போதுவரை அவர் 77 பந்துகளில், 95 ரன்கள் (4s-9., 6s-6)குவித்து தனது அதிரடி ஆட்டத்தால், மைதானத்தில் ரசிகர்களின் கதாநாகனாக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். அவரை தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரங்களுக்கு ஆட்டம் இழந்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் அணி தற்போதுவரை, 22 ஓவர்களில், 4 விக்கெட் இழப்பிற்கு, 111 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.