இன்றைய ராசிபலன் (26/09/2018)

  • மேஷம்

    மேஷம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்துச் செல்லும். உறவினர், நண்பர்களுடன் வீண் விவாதம் வந்துப் போகும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். தடை களை தாண்டி முன்னேறும் நாள்.

  • ரிஷபம்

    ரிஷபம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந் தஸ்து உயரும். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.

  • மிதுனம்

    மிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்த வர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டு வார்கள். பிரியமானவர்களுக்காக சில வற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பழையவேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சிறப்பான நாள்.

  • கடகம்

    கடகம்: கணவன்-மனை விக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப் பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோ கத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.

  • சிம்மம்

    சிம்மம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில வேலைகளை உங்கள் பார்வை யிலேயே முடிப்பது நல்லது. யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்
    காதீர்கள். வெளி உணவுகளை தவிர்க்கப்பாருங்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிடவேண்டாம்.உத்யோகத்தில் அதிகாரிகளால் அலை கழிக்கப்படுவீர்கள். பொறு மைத் தேவைப்படும் நாள்.

  • கன்னி

    கன்னி: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழியில்மதிப்புக் கூடும். கல்யாணப்பேச்சு வார்த்தை வெற்றி யடையும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர் களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

  • துலாம்

    துலாம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றிபெறுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடு வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

  • விருச்சிகம்

    விருச்சிகம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோ கத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.

  • தனுசு

    தனுசு: எதிர்ப்புகள் அடங்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபா ரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

  • மகரம்

    மகரம்: திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பிறந்தவர்கள் உறுது ணையாக இருப்பார்கள். அரசால் ஆதாயம்
    உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள்.வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதி காரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். தைரியம் கூடும் நாள்.

  • கும்பம்

    கும்பம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள்.சில வேலைகளைவிட்டுக் கொடுத்து முடிப்பீர்கள்.  வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

  • மீனம்

    மீனம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். நண்பர்கள், உறவினர் களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.