லண்டனில் வசிக்கும் ஈழத் தமிழர்களே, உங்கள் பாதுகாப்பு கருதியே இந்த முக்கியமான செய்தியை அதிர்வு இணையம் வெளியிடுகிறது. லண்டனில் உள்ள லொயிட்ஸ் வங்கியில் வேலைபார்க்கும் ஆட்களை பிடித்து. அந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒரு நபரின் விபரங்களை தந்தால் 250 பவுண்டுகள் என்று விலைபேசி. இந்த சவுத்திரி என்னும் நபர் 70,500 பேரின் விபரங்களை பெற்றுள்ளார். லண்டனில் உள்ள மே-பெஃயர் என்னும் ஹோட்டலில், ரூம் போட்டு (ஒரு நாளைக்கு 1,000 பவுண்டுகள் வாடகை) இன் நபர் ஒரு கம்பியூட்டர் இயக்கும் ஆள், ஒருவரை அங்கே வைத்திருந்து. இந்த விளையாட்டை ஆரம்பித்துள்ளார்.
முதலில் ஒரு நபரின் விபரங்களை பெற்று, அதற்கான 250 பவுண்டுகளை கொடுத்துவிட்டு. பின்னர் அன் நபருக்கு தொலைபேசி அழைப்பை விடுத்து. லொயிட்ஸ் வங்கியில் இருந்து பேசுவது போல பேசி, இன்ரர் நெட் பாங்கிங் ரகசிய குறியீட்டை பெற்று விடுவார்கள். இதனூடாக அவர்கள் வங்கி கணக்கிற்க்குள் சென்று அங்கே இருக்கும் பணத்தில் ஒரு தொகையை வேறு ஒரு வங்கிக் கணக்கிற்கு மாற்றி. அந்த வங்கில் இருந்து அந்தப் பணத்தை டுபாயில் உள்ள வங்கி ஒன்றுக்கு மாற்றி. டுபாயில் பணத்தை பெற்றுக் கொள்வார்கள். சிறிய தொகை என்பதனால் எவரும் கண்டு கொள்ளவில்லை. இவ்வாறு கடந்த சில மாதங்களாக இவர்கள் 113 மில்லியன் பவுண்டுகளை இன்ரர் நெட் ஊடாக பரி மாறி அதனை காசாக பெற்று, பல நாடுகளில் முதலீடு செய்துள்ளார்கள்.
இன் நிலையில் தான் லண்டனில் சில ஆங்கிலேயர்கள் தமது வங்கிக் கணக்கில் தேவை இல்லாமல் பணம் கழிந்துள்ளது என்று முறைப்பாடு செய்யவே. ஸ்காட்லன் யாட் பொலிசார் நடத்திய ரகசிய புலன் விசாரணையில் சவுத்திரி தற்போது சிக்கியுள்ளார். இவர் சிக்கிவிட்டார் தானே இனி நமக்கு பயம் இல்லையே என்று யாரும் நினைத்துவிடக் கூடாது. அங்கே தான் ஆபத்து காத்திருக்கிறது. ஏன் என்றால், 250 பவுண்டுகளுக்கு ஆசைப்பட்டு சுமார் 70,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் விபரங்களை லொயிட்ஸ் வங்கி ஊழியர்கள் விற்றுள்ளார்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதில் சுமார் 127 லொயிட்ஸ் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளார்களாம். ஆனால் தெரியாமல் இப்படி ஊழல் செய்த மேலும் பல நூறு ஊழியர்கள் உள்ளார்கள். எனவே தமிழர்களே உங்கள் விபரங்கள் கூட ஏற்கனவே விற்கப்பட்டு இருகலாம். என்றோ ஒரு நாள் அது, செயல்பட தொடங்கும். இது சவுத்திரியோடு முடியும் அத்தியாயம் அல்ல… எனவே அனைத்து தமிழர்களும் மிக மிக கவனமாக இருப்பது நல்லது. வங்கியில் இருந்து அழைக்கிறோம் என்றாலே உங்களுக்கு , தலையில் ஒரு ஒளிவட்டம் தோன்ற வேண்டும் !