இந்திய குடிமகனின் தனிமனித அடையாளம் என்ற பெயரில் அனைவருக்கும் ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. வங்கிச் சேவை, பான் கார்டு, செல்போன் சேவை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் போன்ற அரசு சேவைகளை பெறுவதற்கு மத்திய அரசு ஆதாரை கட்டாயம் என்று அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 27 பேர் மனு தாக்கல் செய்துள்ளார்கள்.
கைரேகை, கண் விழித்திரை உள்ளிட்ட தனிமனிதனின் தகவல்கள் ஆதாரில் இடம்பெறுவதால் அதற்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இதன் காரணமாக அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் கட்டாயம் அல்ல என்றும் இதன் மூலம் தகவல் திருடப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த மனுக்கள் அனைத்தயும் ஒன்றாக விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த வழக்கினை நாடு முழுவதும் உள்ளவர்கள் எதிர்பார்த்து கொண்டு தான் உள்ளார்கள்.
ஆதார் என்பது பாதுகாப்பானது என்றாலும் அதனை பெறுவதற்கும், அதில் உள்ள திருத்தங்களை சரி செய்வதற்குமே கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். அதேபோல சரியான தகவல்கள் இடம்பெறாத காரணத்தால் மக்கள் சேவைகளை பெற முடியாத நிலையம் உள்ளது குறிப்பிடத்தக்கது.