வெறுத்து ஒதுக்கிய கணவர், சாதனை படைத்த மனைவி.!

உடல் எடை அதிகமாக இருந்ததால் கணவரால் வெறுத்து ஒதுக்கி விட்டுச் செல்ல பெற்ற ரூபி என்ற தமிழ் பெண் தனது வைராக்கியத்தாலும், தீராத முயற்சியாகும் பலருக்கும் முன் மாதிரியாக சாதனை படைத்து பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்தவர் ரூபி என்ற பெண்,இவருக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.இவர் உடல் பருமன் அதிகமாக இருந்ததால் அவரது கணவர் ரூபியை பெரிதும் அவமானப்படுத்தி அவரை விட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் தனது மகனுடன் தனியாக வாழ்ந்து வந்த ரூபி தனது தீராத முயற்சியால் அசாமில் நடந்த தேசிய அளவிலான பாடி பில்டிங் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து ரூபி கூறுகையில், நான் சில வருடங்களுக்கு முன்னால் மிகவும் பருமனாக இருந்தேன் .அதனால் என் கணவருக்கு என் மீது அன்பு இல்லாமல் அவர் என்னை வெறுத்து ஒதுக்கினார், மேலும் என்னை விட்டுவிட்டும் சென்றுவிட்டார்.

அப்பொழுதுதான் நான் எனது உடல் நிலையை குறித்து மிகவும் வருந்தினேன்.பின்பு எனது எனது நிலையை உணர்ந்து எனது முழு கவனத்தையும் உடற்பயிற்சியில் செலுத்தினேன்.

ஆரம்பத்தில் நடைபயிற்சியை மேற்கொண்ட எனக்கு சிறிதளவு உடல் எடை குறைந்தது.

பின்னர் பல உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டு எனது லட்சியத்தில் முழுமனதாக செயல்பட்டேன். மேலும் அவ்வப்போது பொருளாதார ரீதியாக பல சிரமங்களை எதிர்கொண்டேன். சாப்பிடுவதற்கு உணவு கூட இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு உள்ளேன்.
இருப்பினும் அதையும் தாண்டி முழுமுயற்சி செய்து வெற்றி பெற்றேன் என கூறியுள்ளார்.

ரூபி மிஸ் சென்னை பட்டத்தை வென்றுள்ளார்.பின்னர் அசாமில் நடந்த தேசிய அளவிலான போட்டியிலும் வென்று சாதனை படைத்துள்ளார்.

மேலும் பாடிபில்டிங் துறையில் ஆண்கள் மட்டுமல்லாமல், பெண்களும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்த ரூபி மிஸ் இந்தியா போட்டியில் விரைவில் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என அவரது பயிற்சியாளர் கார்த்திக் கூறியுள்ளார்.

மேலும் பல அவமானங்களுக்கும் பல சோதனைகளுக்கும் நிறைந்த வலிமிகுந்த பாதையில் வெற்றி பெற்று சாதனை படைத்த ரூபியை கண்டு அனைவரும் வியப்படைந்தனர்.