இது என்ன ஆப்கானிஸ்தானா? ஆப்புகானிஸ்தானா? வெளுத்து வாங்கிய வீரர்கள்!

அரபு நாடுகளில் நடந்து வரும் ஆசிய கோப்பை போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் மூன்றாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

இந்த ஆட்டத்தின் போது யாரும் எதிர்பாராத விதமாக இந்திய அணியின் கேப்டனாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இறங்கியுள்ளார். தோனிக்கு கேப்டனாக ஒரு நாள் போட்டிகளில் இந்த போட்டியில் ஆனதும் மூலம் இது அவர்க்கு 200 போட்டியாகும்.

இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அனைவருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ரோஹித், தவான், புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் அறிமுகமாக தீபக் சாகர் களமிறங்கியுள்ளார். வேகப்பந்துவீச்சாளர் கலீல் அஹமது மற்றும் இந்த தொடரில் இதுவரை வாய்ப்பு பெறாத லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே களமிறங்கியுள்ளார்கள்.

டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மொஹம்மத் சேஷாத் தனி ஆளாய் அதிரடியாக ஆடி செஞ்சுரி அடித்துள்ளார்.

இவரின் ஆட்டம் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. மற்ற வீரர்கள் இந்திய பந்து வீச்சை தாக்கு புடிக்க முடியாமல் தங்களது விக்கெட்களை பறிகொடுக்க, இவர் மட்டும் அதிரடியாக ஆடினார்.

பின்னர் களமிறங்கிய நபியும் வெளுத்து வாங்க இந்தியா பந்து வீச்சாளர்கள் திணறி தான் போனார்கள். ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்தது. இந்திய அணிக்கு 253 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. அதிகபட்சமாக ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது சஸாத் 124 ரன்களும், முகமது நபி 64 ரன்களும் குவித்தனர்.