டி.டி.வி.தினகரனுக்கு பகிரங்க சவால் விடும் அதிமுக அமைச்சர்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அங்கு நடைபெற்ற ண்டன பொதுக்கூட்டம் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியை கண்டித்து நடைபெற்றது.

ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் சிங்கள ராணுவத்திற்கு தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அரசு உதவியால் தான் பல்லாயிரக் கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

தமிழ் ஈழ படுகொலைக்கு காரணமான தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க வலியுறுத்தி மாவட்ட அ.தி.மு.க. சார்பில், புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பேசினார். பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயபாஸ்கர், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆட்களை திரட்டி வந்து புதுக்கோட்டையில் டி.டி.வி.தினகரன் பொதுக்கூட்டம் நடத்தினார்.

டிடிவி தினகரன் புதுக்கோட்டை பொதுக்கூட்டத்தில் பேசும்போது என் மீது அபாண்டமாக குற்றம் சுமத்தி உள்ளார். துணிவு இருந்தால் வரும் பொதுத்தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் என்னை எதிர்த்து அவர் போட்டியிட்டு ஜெயிக்க தயாரா? என சவால் விட்டு கேட்கிறேன் என பரபரப்பாக பேசினார்.

மேலும் அவர் பேசுகையில் டி.டி.வி.தினகரனின் குடும்பத்தில் பல கட்சிகள் முளைத்து உள்ளன. இதேபோல தான் மு.க.ஸ்டாலினின் குடும்பத்தினரும் பல பிரிவுகளாக உள்ளனர். முதலில் உங்கள் குடும்பத்தை சரிசெய்யுங்கள். அதன்பிறகு நாட்டை சரிசெய்யலாம் என பேசினார்