இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து சனத்??

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து முன்னாள் வீரர் சனத்ஜெயசூரிய  கவலை வெளியிட்டுள்ளனர்.

இலங்கை அணியின் தற்போதைய நிலை அதிர்ச்சியளிக்கின்றது என ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

எங்கள் கிரிக்கெட் குறித்து தற்போது பெருமைப்பட எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர் தோல்வியடைந்தால் உங்கள் மீது அழுத்தங்கள் உருவாகலாம் ஆனால் அந்த அழுத்தங்களை உள்வாங்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்;கெட் அணிக்கு என்ன நடக்கின்றது என்பது தற்போது எனக்கு தெரியவில்லை,ஆனால் இதற்கு மேல் நிலைமை மோசமாக முடியாது என்பதால் இதிலிருந்து மீள்வதற்கான சிறந்த தருணம் இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி வீரர்கள் அடிப்படை விடயங்களில் கூட எவ்வாறு தவறிழைக்கின்றார்கள் என்பதை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன் விக்கெட்களிற்கு இடையில் ஓடும் விடயத்தில் கூட அவர்கள் தடுமாறுகின்றனர், ஒரு வீரரை மற்றைய வீரர்நம்பாதது வெளிப்படுகின்றது எனவும் சனத் ஜெயசூரியா தெரிவித்துள்ளார்.

அரவிந்த டி சில்வாவும் நானும் கண்ணால் ஒருவரையொருவர் பார்த்துவிட்டே ஒடத்தொடங்குவோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துடுப்பெடுத்தாடும் போது சிறப்பாக ஆடத்தொடங்குபவர்கள் நீண்ட நேரம் நின்று விளையாடாததும் ஏமாற்றமளிக்கின்றது,ரோகித்சர்மா சொகைப் மலிக் போன்றவர்கள் ஆசிய கிண்ணப்போட்டிகளில் அதனை எப்படி செய்யவேண்டும் என்பதை செய்து காட்டியுள்ளனர் எனவும் சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

நாங்கள் இவற்றிற்கு தீர்வை காணாவிட்டால் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளப்போகின்றோம் சில இளம் அணிகள் எப்படி தொழி;ல்சார் தன்மையுடன் விளையாடுவது என்பதை வெளிப்படுத்தியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறிய அணிகளை நாங்கள் சாதாரணமாக எடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அனைத்து துறைகளிலும் நாங்கள் தரம் தாழ்ந்த நிலையில் உள்ளோம் என தெரிவித்துள்ள சனத்ஜெயசூரிய உடற்தகுதியே என்னை பொறுத்தவரை பாரிய கரிசனைக்குரிய விடயமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.