ஆசிய கோப்பை போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் மூன்றாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தின் போது யாரும் எதிர்பாராத விதமாக இந்திய அணியின் கேப்டனாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இறங்கியுள்ளார்.
இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் அனைவருக்கும் ஓய்வளிக்கப்பட்டது. ரோஹித், தவான், புவனேஸ்வர் குமார், பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டது.
இந்திய அணியில் அறிமுகமாக தீபக் சாகர் களமிறங்கினார். வேகப்பந்துவீச்சாளர் கலீல் அஹமது மற்றும் இந்த தொடரில் இதுவரை வாய்ப்பு பெறாத லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே களமிறங்கினார்கள்.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மொஹம்மத் சேஷாத் தனி ஆளாய் அதிரடியாக ஆடி செஞ்சுரி அடித்துள்ளார்.
இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 252 ரன்கள் சேர்த்தது. இந்திய அணிக்கு 253 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது.
253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் சார்பில் லோகேஷ் ராகுல், அம்பத்தி ராயுடு ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர்.
இறுதியில் இந்திய அணி 49.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்கள் எடுத்து ஆட்டம் சமநிலையில் முடிந்தது.
இதற்கு முன்பு பலம் வாய்ந்த அணிகளையே வீழ்த்திய இந்திய அணி, கத்துக்குட்டியான ஆப்கானிஸ்தானிடம் ஏன் திணறியது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சிக்க தொடங்கி விட்டனர்.
இந்திய அணியுடனான போட்டியை எதிர்கொள்ளும் முன்னர், முன்னர் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 3 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசத்திடம் தோல்வி கண்டது.
ஆப்கானிஸ்தான் அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். இந்த தோல்வியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.
இந்திய அணி ஆரம்ப காலத்தில் கத்துக்குட்டியாக இருந்ததை போல, இப்போது ஆப்கானிஸ்தான் அணியின் நிலை உள்ளது.
அந்த அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு, அதிக அளவிலான சர்வதேச போட்டிகளில் இனி பங்கேற்க செய்யும் அளவிற்கு தயாராக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆசிய கோப்பை போட்டியில் படு கேவலமாக தோற்றால், இனி வரும் வாய்ப்புகள் பறிபோகி விடும் என்பது ஆப்கானிஸ்தான் அணியின் கணிப்பு.
கடந்த சில போட்டிகளில் கூட வெற்றியின் நுனி வரை வந்து தான், தோல்வியை தழுவியுள்ளது ஆப்கானிஸ்தான் அணி.
நேற்றைய போட்டியில் இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டதால், தங்களுக்கு இணையான அணியை போல கருதிக்கொண்டு விளையாட வேண்டும் என்று வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
குறைந்த பட்சம் ஆறுதல் வெற்றியாவது பெற்று இந்த தொடரில் இருந்து வெளியேற வேண்டும் என்பதால், நேற்றைய ஆட்டத்தில் அந்த அளவுக்கு ஆக்ரோசமாக செயல்பட்டுள்ளது ஆப்கானிஸ்தான் அணி.