தோழிக்கு தோழன் செய்த செயல் .! அதிர்ந்து போன காவலர்கள்.!!

டெல்லி மாநிலத்தில் உள்ள பாரபுல்லா நகரில் பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழே 2 பாலிதீன் பைகளில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக அங்குள்ள நபர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பைகளை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அங்குள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆராய்கையில் ஒரு நபர் இந்த பைகளை கொண்டு வந்து பாலத்தின் கீழே வீசி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த நபர் யார் என்பது குறித்த விசாரணரியை காவல் துறையினர் மேற்கொண்டனர்.

அவர்கள் விசாரணை மேற்கொள்ளையில் இந்த கொலையை செய்தவர் ரிஷ்வான்கான் என்பதும் கொலையுண்ட பெண் அவரது தோழி என்றும் தெரியவந்தது.

ரிஷ்வான் காணும் அந்த பெண்ணும் கடந்த 11 மாதங்களாக பழகி வந்த நிலையில், அந்த பெண் மற்றொரு நபருடன் பேசுவதை அவரால் பொறுக்க முடியவில்லை. இந்த விஷயம் தொடர்பாக இவருக்கும் அந்த பெண்ணிற்கும் இடையே அடிக்கடி தகராறு நடைபெற்று வந்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த ரிஷ்வான் கான் அந்த பெண்ணை கத்தியால் குத்தியும் ஆத்திரம் அடங்காமல் துண்டு துண்டாக நறுக்கி பாலிதீன் பையில் போட்டு இந்த பலத்திற்கு அடியில் போட்டது தெரிய வந்தது. ரிஷ்வான் கான் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மேலும் பல விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.