உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இந்திய குடிமகனின் தனிமனித அடையாளம் என்ற பெயரில் அனைவருக்கும் ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன. வங்கிச் சேவை, பான் கார்டு, செல்போன் சேவை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் போன்ற அரசு சேவைகளை பெறுவதற்குஆதாரை கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 27 பேர் மனு தாக்கல் செய்துள்ளார்கள்.

கைரேகை, கண் விழித்திரை உள்ளிட்ட தனிமனிதனின் தகவல்கள் ஆதாரில் இடம்பெறுவதால் அதற்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இதன் காரணமாக அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் கட்டாயம் அல்ல என்றும் இதன் மூலம் தகவல் திருடப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்த மனுக்கள் அனைத்தயும் ஒன்றாக விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கினை நாடு முழுவதும் உள்ளவர்கள் எதிர்பார்த்து கொண்டு உள்ளார்கள்.

ஆதார் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அரசின் அனைத்து சேவைகளுக்கும் கட்டாயம் என தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பளித்து வரும் அரசியல் சாசன அமர்வு மூன்று விதமான தீர்ப்புகளை வாசித்து வருகிறது.