டிரம்பின் உரையை கேட்டு சிரித்த உலக தலைவர்கள்!

டொனால்ட் டிரம்ப்  தனது சாதனைகள் குறித்து விபரித்த வேளை உலக தலைவர்கள் அதனை கேட்டு சிரித்துள்ளனர்.

ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது அமெரி;க்காவிற்கே முன்னுரிமை என்ற கொள்கையை முன்னிறுத்தி உரையாற்றியுள்ளார்.

அவரது உரையை செவிமடுத்த உலக தலைவர்கள் சிரிப்புகள் மூலமாகவும் தலையசைப்பின் மூலமாகவும் சில வேளைகளில் கடும் மௌனத்தின் மூலமாகவும் பதிலளித்துள்ளனர்.

ஒவ்வொரு நாட்டிற்கும் தனக்குரிய நம்பிக்கைகள் விழுமியங்கள் கலாச்சாரங்களை பின்பற்றுவதற்கு உள்ள உரிமையை தான் மதிப்பதாக தெரிவித்துள்ளார்.

அமெரி;க்கா ஏனைய உலக நாடுகள் எவ்வாறு செயற்படவேண்டும்,வாழவேண்டும், வழிபடவேண்டும் என ஒருபோதும் தெரிவிக்காது எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஏனைய உலக நாடுகள் அமெரிக்காவின் இறமையை மதிக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் வேறு எந்த ஜனாதிபதியையும் விட நான் இரண்டு வருடங்களில் அதிகம் சாதித்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் இந்த கருத்தை கேட்ட உலக நாடுகளின் தலைவர்கள்  சிரி;த்;துள்ளனர் முணுமுணுத்துள்ளனர்,இதன் காரணமாக சிறிது அதிர்ச்சியடைந்த டிரம்ப் பின்னர் நான் சொல்வது உண்மை என  குறிப்பிட்டுள்ளார்.