தமிழக அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

புதுக்கோட்டையில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் பங்கேற்று உரையாற்றினார்.

அவர் கூறியவை, டி.டி.வி.தினகரன், சசிகலாவின் விசுவாசி அல்ல. அவர் சசிகலா புஷ்பாவின் உண்மையான விசுவாசி. சசிகலாவின் விசுவாசியாக அவர் இருந்தால், ஆர்கே நகர் தேர்தலின் போது சசிகலா புகைப்படத்தை பேனரில் போட சொல்லியிருப்பார். ஆனால் பேனரில் சசிகலா புகைப்படத்தை போடக்கூடாது என்று கூறினார்.

தினகரன் சசிகலா புஷ்பாவின் விசுவாசியாக இருப்பதால் தான் ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்ட சசிகலா புஷ்பாவை, நாடாளுமன்றத்தில் ஜெயலலிதா மீது குற்றம்சாட்டிய சசிகலா புஷ்பாவை சேர்க்கவைத்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டவர் டிடிவி தினகரன். 10 ஆண்டுகள் பதுங்கி இருந்தவர், டிடிவி தினகரன். குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயற்சி செய்கிறார். அதிமுகவை எதிர்ப்பவர்கள், திமுகவாக இருந்தாலும், டி.டி.வி. தினகரனாக இருந்தாலும் சரி, மூட்டை போன்று சிதறி ஓடுவார்கள் என்று கூறியுள்ளார்.