முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாக பேசியது தொடர்பாக திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர்களை விமர்சித்ததோடு மட்டும் அல்லாது, மக்களின் உணர்வுகளை தூண்டும் வகையில் சில சமூகத்தினரையும் கொச்சை படுத்தி பேசினார்.
இதனை தொடர்ந்து தமிழகமெங்கும் அவருக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டதை தொடர்ந்தே காவல்துறையினர் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன்னைக் கண்டு அஞ்சுவதாகவும், சட்டையை கழற்றிவிட்டு வந்து நேருக்கு நேர் என்னுடன் மோதத் தயாரா?’ என காவல்துறை அதிகாரி ஒருவருக்கு, கருணாஸ் நேருக்கு நேர் சவால் விடுத்தார்.
இப்படி பல்வேறு சர்ச்சை கருத்துக்களைத் தெரிவித்தார் கருணாஸ். அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இது தொடர்பாக கருணாஸ் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட எட்டுப் பிரிவுகளில் போலிசார் சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முதலில் கைது செய்யபப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கருணாஸ், இப்போது வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னையில் இருந்தால் நிச்சயம் தனது ஆதரவாளர்களை சந்தித்து ஏதாவது திட்டம் தீட்ட கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூருக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் கருணாஸை ஒருவாரம் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறையினர் தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதில் முதல்வரை மிரட்டியதில் ஆரம்பித்து, ஐ.பி.எஸ் அதிகாரி அரவிந்தனை மிரட்டியது, தினமும் குடிப்பதற்காக ஒரு லட்சம் செலவு செய்வது, இந்தப் பணம் வரக் கூடிய பின்னணி ஆகியவை குறித்து முழுமையாக ஆராய உள்ளனர்.
கருணாஸ்சை பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை அறிவதற்காகத்தான் காவல்துறையினர் விசாரணை நடத்த அனுமதி கேட்டனர்.
இந்நிலையில், காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய போலீசாரின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இருந்த போதிலும் இதை இப்படியே விட்டுவிடப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது ஆளும் கட்சி.
சசிகலாவுடன் சந்திப்புக்கு பிறகு தான் கருணாஸ் இந்த அளவிற்கு ஆக்ரோசமாக மாறியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
இதனை அறிந்து தான் அடுத்து என்ன திட்டம் வைத்துள்ளார்கள் என்பதை அறிய காவல்துறையினர் விசாரணை நடத்த அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
தமிழக அரசியல் என்பது தி.மு.கவுக்கும் அ.தி.மு.கவுக்கும் இடையில் நடந்துகொண்டிருக்கிறது.
இதை முறியடிக்கும் வகையில், சாதியை முன்வைத்து அரசியல் ஆட்டத்தைத் தொடங்கினார் கருணாஸ்
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தி.மு.கவுக்கும் சசிகலா தரப்புக்கும் தூதுவராக இருக்கிறார் கருணாஸ்.
இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டும் என்றால், ஸ்டாலின் தயவு மிகவும் அவசியம். தினகரனும் ஸ்டாலினும் இணையாவிட்டால், ஆட்சியைக் கவிழ்க்க முடியாது.
இதன் தொடர்ச்சியாகத்தான், கருணாஸுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார் ஸ்டாலின். இப்படி பல திட்டங்கள் சசிகலா தரப்பில் இருந்து இனி அடுத்தடுத்து அரங்கேறும் என்று கூறி திகைக்க வைக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.