விராட் கோலியின் முதல் ஆக்சன் திரைப்பட Trailer வெளியீடு..!

வெளியானது பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலியின் ஆக்சன் திரைப்பட Trailer…..!

பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலி அவரது ட்விட்டர் வாயிலாக தனது ரசிகர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திஇருந்தார். ஆசிய கோப்பை போட்டிகள் தற்போது பிஸியாக நடைப்பெற்று வரும் நிலையில் இந்த தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அணித்தலைவர் விராட் கோலி, தனது ட்விட்டர் பக்கத்தில் பிஸியாகியுள்ளார். ட்விட்டர் பக்கத்தில் மட்டும் பிஸியாகவில்லை, திரைதுறையிலும் பிஸியாகிவிடார் என இவரது ட்விட்டர் பதிவு தெரிவிக்கின்றது.

சமீபத்தில் ஆக்ஷன் ஹீரோவாக விராட் கோலி இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தினை கோலி இந்த பதிவில் பகிர்ந்துள்ளார். மேலும் “10 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் புது வடிவில் வருகின்றேன் #TrailerTheMovie ” என குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து, இன்று மீண்டும் அவர் தனது ட்விட்டர் பக்கத்த்கில் #TrailerTheMovie திரைப்படத்தின் வீடியோவை வெளிடிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இனையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த ட்ரைலர் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது..!