-
மேஷம்
மேஷம்:
ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சில நேரங்களில் மன அமைதியற்ற நிலைஏற்படும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. பொறுப் புணர்ந்து செயல்பட வேண்டிய நாள். -
ரிஷபம்
ரிஷபம்:
பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். வெளி வட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோ கத்தில்சக ஊழியர்களிடம் விவாதம் வேண் டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள். -
மிதுனம்
மிதுனம்:
தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஒத்து ழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல்செய்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். இனிமை யான நாள். -
கடகம்
கடகம்:
மற்றவர்களின் ரசனைக் கேற்ப உங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொள்வீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சாதித்துக் காட்டும் நாள். -
சிம்மம்
சிம்மம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். எதிர்பார்த்த வேலை கள் தடையின்றி முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியா பாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப் பார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். மகிழ்ச் சியான நாள்
-
கன்னி
கன்னி:
சந்திராஷ்டமம் தொடங்குவதால் வேலைச் சுமையால் பதட்டம் அதிகரிக்கும். மற்றவர்களுக்காகநியாயம் பேசப் போய் நீங்கள் சிக்கிக் கொள்ளாதீர்கள். சிறுசிறுஅவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுக்க வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள். -
துலாம்
துலாம்:
சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும்.விலை உயர்ந்தப் பொருட் கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சூட்சு மங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள். -
விருச்சிகம்
விருச்சிகம்:
குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின்உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள். -
தனுசு
தனுசு: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பற்றுவரவுகணிசமாக யரும்.உத்யோகத்தில்உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி ஆதரிப்பார். நினைத்தது நிறைவேறும் நாள்.
-
மகரம்
மகரம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற் படும். புது வேலை அமையும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவுக்கிட்டும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
-
கும்பம்
கும்பம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர் வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. புது வாகனம் வாங்கு வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்தை முடிப்பீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
-
மீனம்
மீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி எதிலும் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இழு பறியாகஇருந்த வேலைகள் முடியும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியா பாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.