சம்பளமே வாங்காமல் நடிக்கும் சிவகார்த்திகேயன் – காரணம்??

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் மிமிக்கிரி கலைஞராக தன்னுடைய பயணத்தை தொடங்கிய சிவகார்த்திகேயன் தன்னுடைய திறமையாலும் தன்னம்பிக்கையாலும் இன்று முன்னணி நடிகராகியுள்ளார்.

ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன் அட்லீ இயக்கத்தில் உருவாகி இருந்த குறும்படத்தில் நடித்து இருந்தார். இதனையடுத்து தற்போது மீண்டும் மோதி விளையாடு பாப்பா என்ற குறும்படத்தில் நடித்து உள்ளாராம்.

5 நிமிடம் மட்டுமே ஓடக் கூடிய இந்த குறும்படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் சம்பளம் வாங்கவில்லையாம். அதற்கான காரணம் என்னவென்றால் இந்த குறும்படம் குழந்தைகளின் பாலியல் தொல்லைகளுக்கு எதிராகவும் பாலியல் தொல்லைகளை தடுக்கும் வகையிலும் இருப்பதால் தான் என்பது குறிப்பிடத்தக்கது.