ஷாக்கிங் தகவல் வெளியிட்ட ஓவியா , கொண்டாட்டத்தில் பிக் பாஸ் ரசிகர்கள்.!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் புகழின் உச்சத்திற்கே சென்றவர் ஓவியா. முதல் சீசனின் டைட்டில் வின்னர் இவர் இல்லை என்றாலும் மக்களின் மனதை வென்றவர் ஓவியா தான் என்பது மறுக்க முடியாத உண்மை.

தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வீட்டிற்குள் முதல் சீசன் போட்டியாளர்கள் அனைவருமே வந்து சென்று விட்டனர். ஆனால் ஓவியா ஆரம்பத்தில் வந்ததோடு சரி அதோடு மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வரவே இல்லை.

இந்நிலையில் தற்போது ஓவியா ட்விட்டரில் ரசிகர்களிடம் உரையாடிய போது ரசிகர் ஒருவர் பிக் பாஸ் வீட்டிற்குள் நீங்கள் வருவீர்களா? என கேட்டதற்கு பொறுத்திருந்து பாருங்கள் என கூறி தான் வருவேன் என்பதை மறைமுகமாக உறுதி செய்துள்ளார். இதனால் ஓவியா ஆரமியினர் கொண்டாடத்தில் இறங்கியுள்ளனர்.