நன்றி மறந்த முருகதாஸ்?

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குனராக விளங்கி வருபவர் முருகதாஸ். இவர் முதல் முதலாக தல அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த தீனா படத்தின் மூலமாக தான் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார்.

ஆனால் அதன் பிறகு அஜித்துடன் முருகதாஸ் இணையவே இல்லை. இருப்பினும் எங்கு சென்றாலும் அஜித்திற்கு என்னிடம் கதை உள்ளது என்று மட்டுமே கூறி வருகிறார். நேற்று கூட தனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி தளபதி ரசிகர்களுக்கு நன்றி என கூறியிருந்தார்.

மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் முருகதாஸின் பிறந்த நாளுக்காக வெளியிட்டு இருந்த வீடியோவில் முருகதாஸ் இயக்கிய அனைத்து படங்களும் இடம் பெற்றிருந்தன. ஆனால் முதல் படமான தீனா மட்டும் இடம் பெறவில்லை.

இது குறித்து தற்போது தல ரசிகர்கள் நீங்கள் இயக்குனராக அறிமுகமாக முதல் வாய்ப்பு கொடுத்தவர் அஜித். அவரை மறக்கலாமா? இப்படி பண்ணிடீங்களா சார் என அவர் மீது கோபத்தை காட்டி வருகின்றனர்.