ஆட்டிப்படைக்கும் வியாதி.. அப்போலோவில் குவியும் திமுக தொண்டர்கள்!

திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இன்று நள்ளிரவில் இருந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவை தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு செயல்தலைவராக இருந்த ஸ்டாலின் திமுக கட்சியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து அரசியல் பணிகள் அதிகமானதால் கடந்த ஒரு வார காலமாக மிகுந்த அலைச்சலில் இருந்துள்ளார்.

இதனால் உடல் நலக்குறைபாடு ஏற்படவே நேற்று இரவு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறுநீரக தொற்று காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் கண்புரை பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார்.

அரசியல் பிரபலங்கள் பொதுவாக இந்த சிறுநீரக தொற்று பிரச்சனையால் மட்டுமே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இதற்கு முன்னர் கருணாநிதிக்கும் சிறுநீரக தொற்று இருந்ததால் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதே போல வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் சிறுநீரக தொற்று காரனத்தினால் தான்.

இவர்கள் வரிசையில் கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கார் தீவிர சிறுநீரக தொற்று பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்.

ஸ்டாலினுக்கு வந்துள்ள இந்த பாதிப்பு உடனடியாக கண்டறியப்பட்டு விட்டதால், சிகிச்சை பெற்று குணமாகி வருகிறார்.