இந்த வருடத்தின் பொங்கலானது தல தீபாவளியாகவும், தலைவரின் தீபாவளியாகவும் இருக்கும். ஆகவே இந்த வருடத்தின் பொங்கல் பண்டிகையானது மிகவும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட மற்றும் தல அஜித்குமார் நடிக்கும் விஸ்வாசம் ஆகிய இரண்டு திரைப்படங்களையும் வரும் வருட பொங்கலுக்கு திரைக்கு கொண்டு படக்குழு திட்டமிட்டு உள்ளனர்.
இதனால் இவர்களின் படப்பிடிப்புகள் மிகவும் சுறுசுறுப்புடன் நடந்து வருகிறது. மேலும் விசுவாசம் திரைப்படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வரவே படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்புகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பொங்கலுக்கு தள்ளிப்போனது.
இந்நிலையில் ரஜினிகாந்த் சங்கர் கூட்டணியில் உருவாகும் எந்திரன் 2.0 வரும் நவம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.
அதற்கு அடுத்தபடியாக பொங்கலுக்கு பேட்ட திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. ஆகவே இந்த பொங்கலை ரஜினி ரசிகர்கள் மற்றும் தல ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்.
இந்த பொங்கலானது ரஜினி மற்றும் அஜித்தின் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்க்கபடுகிறது. தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக திரைக்கு வரும் நாள் தள்ளிப்போனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.