முப்பது மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் பள்ளி பஸ் கண்டக்டர்…..! கவனமாக இருங்கள் பெற்றோர்களே…..!
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்று 42 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக, இந்தப் பள்ளியில் நன்றாகப் படிக்கும் மாணவிகள், தங்கள் படிப்பில் நாட்டமில்லாமல் மனச்சோர்வுடன் இருந்தனர்.
இதனால், பள்ளி நிர்வாகம், ஒரு குழு அமைத்து, மாணவிகளுக்கு, என்ன பிரச்சினை என்று, அவர்களிடம் தனித்தனியாக விசாரணையை மேற் கொண்டது. பின், அவர்கள் எல்லாம், தாங்கள் செல்லும் பள்ளிப் பேருந்தில் பணி புரிந்து வரும், கண்டகடர் ராஜேந்திரன் (வயது 37), தங்களுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதாகக் கூறி அழுதனர்.
இவ்வாறு, அந்தக் கண்டக்டர் மீது, 30 மாணவிகள் புகார் கூறினர். இதனை அடுத்து, உடனே, பள்ளி நிர்வாகம், ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில், ரவிச்சந்திரன் மீது புகார் அளித்தனர்.
இது போல, இந்தப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணி புரிந்து வந்த, ராஜேஸ் என்பவரும், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், அவர் மீதும் புகார் கொடுக்கப் பட்டுள்ளது. இவர் தற்போது, போலீசில் சிக்காமல் தலை மறைவாகி உள்ளார்.
இந்த இருவர் மீதும், ஒட்டன்சத்திரம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கீதா ரவிச்சந்திரன், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளார்.
பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகள் வீடு திரும்பும் வரை, இன்னும் என்னென்ன கொடுமைகளை அனுபவிக்க வேண்டி இருக்குமோ, என்று ஒரு மாணவியின் தாய் கதறி அழுதது, காண்போரைக் கலங்கச் செய்தது.