எம்.எல்.ஏ-ஆபிசுக்குள் பட்டப்பகலிலேயே என்ன நடக்கிறது தெரியுமா..? பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி..!

சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி முழுவதும் சென்று மக்கள் குறைகளை கேட்டு அறிந்து நடவடிக்கை எடுப்பதற்கு சிரமாக இருக்கும் என்பதால், தொகுதியிலேயே சட்ட மன்ற அலுவலகம் அமைக்கப்பட்டது.

அங்கு வந்து பொதுமக்கள் தங்கள் மனுக்களைக் கொடுத்தால் நடவடிக்கை எடுக்க வசதியாக இருக்கும் என்ற அடிப்படையில் சட்டமன்ற அலுவலகம் கட்டப்பட்டது.

2000ஆம் ஆண்டு கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் ரூ.4.85-லட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற அலுவலகம் கட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்தத் தொகுதி மக்கள் கோரிக்கை மனுக்களை கொண்டு வந்து சட்ட மன்ற உறுப்பினரிடம் வழங்கினர்.

மக்கள் கொடுக்கும் சில மனுக்கள் மீது அதிகாரிகள் விசாரணை செய்து உரிய நடவடிக்கைகள் நடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். விஜயகுமார் சட்டமன்ற அலுவலகம் பக்கமே வராமல் இருக்கிறார்.

இதனால் அலுவலகம் 2 ஆண்டுகளாக மூடியே கிடக்கிறது. பொதுமக்கள் தங்கள் தொகுதி பிரச்சனைகளை சட்டமன்ற உறுப்பினரிடம் கூற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் சட்டமன்ற அலுவலகம் மூடியே கிடப்பதால், கட்டிடம் சேதமடைந்துள்ளது. மேலும் சமுகவிரோதிகள் மது அருந்தும் இடமாக மாறியுள்ளது.

இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டி தொகுதியில், மேல்முதலம்பேட்டில் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து செங்கல் சூளை நடத்தப்பட்டு வருகிறது.

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

செதில்பாக்கத்தில் பஞ்சமி நிலம் மீட்க வேண்டும் என மக்கள் தொடர்ந்து போராடிவருகின்றனர்.

உள்ளாட்சி மன்றம் தேர்தல் நடைபெறாததால், குடிநீர், சாலைகள் சீரமைக்கப்படவில்லை. இப்படிப் பல பிரச்சனைகளுக்காக இந்த தொகுதிமக்கள் போராடி வருகிறார்கள்.

ஆனால் இதை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறார் இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர். 2 ஆண்டுகளாகச் சட்டமன்ற அலுவலகம் மூடியே இருக்கிறது.

இதனால் பல லட்சம் அரசு பனங்கள் வீணாகியுள்ளன. எனவே உடனடியாக சட்டமன்ற அலுவலகத்தைத் திறக்க வேண்டும்.

அலுவலகத்திற்கு வாரம் ஒரு முறையாவது சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் வந்து பொது மக்களிடம் மனுக்களைப் பெற வேண்டும், அதனடிப்படையில் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.