தாமரை பாச்சா இங்கு பலிக்காது.! முதல்வர் அதிரடி!

கர்நாடக முதல்வர் குமாரசாமி இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்து திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றார். அவர் அங்கு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது கர்நாடகத்தில் எங்கள் ஆட்சி 5 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும். எங்கள் தரப்பில் இருந்து 18 எம்.எல்.ஏ.க்கள் சென்றதாக கூறுவது பொய்யான தகவல். கர்நாடக அரசியல் நிலைமை சீராக இருக்கிறது. கர்நாடகத்தில் பா.ஜனதா நடத்தும் தாமரை ஆபரேசன் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்று அவர் தெரிவித்தார்,