தமிழக பாஜக மாநில தலைவர் தமிழிசை அவ்வப்போது சர்ச்சையாக பேசி நெட்டிசன்களிடம் மாட்டிக்கொள்வார். தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாத சூழ்நிலை உள்ளது. பொதுவாகவே நெட்டிசன்கள் பாஜக மற்றும் பாஜகவின் முக்கிய நிர்வாகிகளான ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, சுப்பிரமணிசாமி ஆகியோரை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக மாநில பாஜக தலைவர் தமிழிசையை, சமூக வலைத்தளங்களில் இழிவு படுத்துவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் ஒருவர் உண்ணாவிரதம் இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் பூசாரி சதீஷ்குமார். இவர் பதாகை ஒன்றை உடலில் மாட்டியபடி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அந்த பதாகையில்” டாக்டர் தமிழிசை அம்மா அவர்களை வலைத்தளங்களில் இழிவு படுத்துவர்களை கைது செய்ய வேண்டி உண்ணாவிரதம்” என்று அதில் எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர் அனுமதியின்றி உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி கைது செய்தனர்.