மொட்டைமாடியில் தூங்கிய மனைவி!. விடியற்காலையில் நேர்ந்த துயரம்!

சென்னையில் பட்டினப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கணேசன் என்பவரும் அவரின் மனைவி மைதிலி இருவரும் வசித்து வந்தனர். 35 வயது நிரம்பிய மைதிலி மொட்டை மாடியில் தூங்குவதை அதிகம் விரும்புவார்.

அடிக்கடி மொட்டை மாடியில் தனியாக தூங்குபவர் விடியற்காலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து வீட்டிற்குள் வந்துவிடுவாராம். ஆனால் சம்பவத்தன்று ஏழு மணி ஆகியும் வீட்டிற்குள் வரவில்லை.

இவரது கணவர் கணேசன் மற்றும் குழந்தைகள் அனைவரும் இரண்டாவது மாடியில் உள்ள வீட்டில் தூங்கி உள்ளனர். இந்நிலையில் காலை ஏழு மணிக்கு வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு எழுந்து வந்தார் கணேசன். அப்போது பக்கத்து குடியிருப்பு பகுதியினர் கூறிய செய்தி கணேசனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அவரது மனைவி மைதிலி கீழ்தளத்தில் உள்ள வராண்டாவில் பலத்த காயங்களுடன் கிடப்பதாக அவர்கள் கூறினர். இதனைக் கேட்டு அலறியடித்து ஓடிவந்த கணேசன் தனது மனைவி மைதிலியை எழுப்ப முயன்றார். அப்போது தான் மைதிலி ஏற்கனவே இறந்து விட்டதை உணர்ந்த கணேசன் மற்றும் அவரது குழந்தைகள் ககதறி அழுதுள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்த பட்டினப்பாக்கம் காவல் துறையினர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.முதல் கட்ட விசாரணையில் காற்றுக்காக மொட்டை மாடிக்கு தூங்க சென்ற மைதிலி தவறி விழுந்து உயிரிழந்ததாக தெரிய வந்தது. மேலும் மைதிலியின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.