பஞ்சாப் மாநிலத்தில் பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர் ஜெய்கிருஷ்ணன்(65). இவருக்கு திருமணமாகி 3 மகன், ஒரு மகள் உள்ளனர், மனைவி இறந்துவிட்டார்.
அவர் தலைமை ஆசிரியராக வேலைபார்த்து வந்த பள்ளியில் தான் மகத் என்ற மாணவி படித்துவந்தார். இவர் பள்ளியில் இருந்து ஓய்வுபெற்ற பின்பும், மாணவிக்கு கல்வி தொடர்பான ஆலோசனைகள் கூறியதுடன், டியூசனும் எடுத்துவந்தார்.
இதனால் ஜெய்கிருஷ்ணன் மீது மாணவிக்கு ஈர்ப்பு உருவானது. ஆனால் இதை யாரும் ஒரு பொருட்டாக கருதவில்லை. ஆசிரியர், மாணவி உறவு என்றே நினைத்துக்கொண்டனர்.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர்.
வாழ்ந்தால் முன்னாள் தலைமை ஆசிரியர் ஜெய்கிருஷ்ணனுடன்தான் வாழ்வேன். என் கணவரை என்னைவிட்டு பிரித்துவிடாதீர்கள் என கதறி அழுது கெஞ்சி இருக்கிறார்.
ஆனால், பொலிசார் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட், திருமணத்திற்குரிய பதிவு ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு கூறினார். ஆனால் அதற்கு மகக் பதில் ஏதும் சொல்லாமல் அமைதி காத்தார்.
மகக் நலன் கருதி அவரை பெற்றோருடன் அனுப்பி வைக்க வேண்டும். அவர் செல்ல மறுத்தால் விடுதியில் வைத்து இருக்க வேண்டும்.
அதே நேரத்தில் ஆசிரியர் ஜெய்கிஷன் செய்த செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது. மகள் வயதுடைய ஒருவரை திருமணம் செய்ய முடியுமா? மாணவியை மனைவியாக ஏற்று கொள்ளலாமா? அவரே விருப்பப்பட்டு வந்தாலும், அவருக்கு புத்திமத்தி சொல்லி இருக்க வேண்டாமா? ஜெய்கிஷனை இதில் இருந்து விடுவித்தால் ஒரு தவறான முன்னுதாரணம் ஆகி விடும்.
எனவே ஜெய்கிஷனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும். இதைத்தொடர்ந்து ஜெய்கிஷன் அபோகர் நகர சிறையில் அடைக்கப்பட்டார். மாணவி மகத்தை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.