செல்போன் வாங்கிக் கொடுத்து, 10-வது படிக்கும் மாணவனைக் காதலித்து, அவனுடன் ஓட்டம் பிடித்த 40 வயது டீச்சர்….!

கலி முத்திப் போச்சு…! செல்போன் வாங்கிக் கொடுத்து, 10-வது படிக்கும் மாணவனைக் காதலித்து, அவனுடன் ஓட்டம் பிடித்த 40 வயது டீச்சர்….!

கேரள மாநிலம் ஆழப்புலா அருகே, சேர்த்தலா முகம்மா என்ற பகுதி உள்ளது. இங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில், அநத ஆசிரியை வேலை பார்த்து வந்தார். அவருக்கு வயது 40. இவருக்குத் திருமணம் ஆகி, 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கருத்து வேறுபாடு காரணமாக, கணவனை விட்டுப் பிரிந்து, தனியே வசித்து வருகிறார்.

இவருக்கு அதே பள்ளியில் படிக்கும் 10-வது படிக்கும் மாணவன் ஒருவனை மிகவும் பிடித்து விட்டது. அவனுடன் அதிக நேரம் செலவிட்டுப் பேசினார். அவனை தனது வீட்டிற்கும் வரவழைத்து, பேசிக் கொண்டே இருந்திருக்கிறார்.

நாளடைவில், அந்த டீச்சரும், மாணவனும் காதலிக்கத் துவங்கினர். இதற்குப் பரிசாக, அந்த டீச்சர், அந்த மாணவனுக்கு செல்போன் ஒன்றை வாங்கிப் பரிசாக அளித்துள்ளார். இதில், இருவரும் மணிக்கணக்கில் பேசி வந்தனர்.

இந்த நிலையில், திடீர் என்று, அந்த டீச்சர், தான் காதலித்த மாணவனுடன் மாயமானார். மாணவனைக் காணாமல் தேடிய பெற்றோருக்கு, லேட்டாகத் தான், இந்த விஷயம் தெரிய வந்திருக்கிறது. இது குறித்து, முகம்மா காவல் நிலையத்தில், அவர்கள், தங்கள் மகனைக் காணவில்லை, டீச்சர் கூட்டிக் கொண்டு ஓடி விட்டதாக தெரிவித்தனர்.

சேர்த்தலா, டி.எஸ்.பி. லால் உத்தரவுப்படி, அவர்களைத் தேடி வருகின்றனர். போலீசார் தேடிய போது, அவர்கள் வர்க்கலாவில் இருப்பதாக, தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு செல்வதற்குள், அவர்கள் அங்கிருந்து வேறு இடத்திற்கு தப்பிச் சென்று விட்டனர்.

அவர்களை கேரள போலீசார் மும்முரமாகத் தேடி வருகின்றனர்.