கடந்த 19-ந்தேதி ஒரு பவுன் தங்கம் விலை ரூ.23 ஆயிரத்து 600 ஆக இருந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் 25-ந்தேதி பவுன் ரூ.23 ஆயிரத்து 544-க்கு விற்பனையானது. தொடர்ந்து விலை குறைந்து கொண்டே இருந்தது.
நேற்று பவுனுக்கு ரூ.72 குறைந்து ரூ.23 ஆயிரத்து 432 ஆக விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரே நாளில் அதிரடியாக பவுனுக்கு ரூ.200 குறைந்தது. ஒரு பவுன் ரூ.23 ஆயிரத்து 232 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.2,904-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி கிலோவுக்கு ரூ.500 குறைந்திருக்கிறது. ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 200 ஆகவும், ஒரு கிராம் ரு.40.20 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.