இப்படி ஆனதே என நொந்து போன துரைமுருகன்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

திமுக தலைவர் கருணாநிதி இறந்த பிறகு திமுக தலைவர் பதவியை முக ஸ்டாலினும், முக ஸ்டாலினின் பொருளாளர் பதவியை துரைமுருகனும் ஏற்றுகொண்டார்கள். பொறுப்பேற்ற அன்றே வசூலை ஆரம்பித்தார் துரைமுருகன்.

பொன்முடி, வேலு, நேரு என பலரின் போட்டிக்கிடையே பொருளாளர் பொறுப்பை விருப்பபட்டு வாங்கிவிட்டு மகிழ்ச்சியை வந்தார் துறைமுருகன். ஆனால் இப்போது செய்வதறியாது திகைத்து போயுள்ளதாக மூத்த நிர்வாகிகள் கதைக்க தொடங்கியுள்ளார்கள்.

உங்கள் திறமையைப் பயன்படுத்தி கட்சியினரிடம் நிதி வசூலித்துக் கொடுத்தால் மட்டும் போதும் என திமுக மேலிடம் கூறிவிட்டதாம். மேலிடம் யார் என்பது உங்கள் சிந்தனைக்கே!

அவரும் மூத்த தலைவர், கட்சியின் பொருளாளர் என்ற அடிப்படையில் மாவட்டச் செயலாளர் அனைவரிடமும் பேசியுள்ளார். ஆனால் அவர்களோ, நிதி என்று வாயெடுத்தாலே தேர்தல் வரட்டும் அண்ணே என்று ஓட்டம் பிடித்துள்ளார்கள். யாரும் தற்போது நிதியை கொடுக்க தயராக இல்லை என்பது தெரிய வந்ததையடுத்து கட்சி தலைவர் ஸ்டாலின் அதிர்ச்சியில் உள்ளாராம்.

இந்த பொழப்புக்கு கலைஞர் இருந்த போது கௌரவுமாக இருந்த அந்த பொறுப்பிலே இருந்திருக்கலாமோ என யோசிக்க தொடங்கிவிட்டாராம். பொருளாளர். (கருணா)நிதியால் வளர்ந்த கட்சிக்கு நிதியால் இப்படி ஒரு நிலைமையா?