விஸ்வரூபம் எடுக்கும் திமுக பிரச்சனை!

திமுக தலைவர் கருணாநிதி இறந்த பிறகு திமுக தலைவர் பதவியை முக ஸ்டாலினும், முக ஸ்டாலினின் பொருளாளர் பதவியை துரைமுருகனும் ஏற்றுகொண்டார்கள். பொறுப்பேற்ற அன்றே வசூலை ஆரம்பித்தார் துரைமுருகன்.

பொன்முடி, வேலு, நேரு என பலரின் போட்டிக்கிடையே பொருளாளர் பொறுப்பை விருப்பபட்டு வாங்கிவிட்டு மகிழ்ச்சியை வந்தார் துரைமுருகன். உங்கள் திறமையைப் பயன்படுத்தி கட்சியினரிடம் நிதி வசூலித்துக் கொடுத்தால் மட்டும் போதும் என திமுக மேலிடம் கூறிவிட்டதாம்.

அவரும் மூத்த தலைவர், கட்சியின் பொருளாளர் என்ற அடிப்படையில் மாவட்டச் செயலாளர் அனைவரிடமும் பேசியுள்ளார். ஆனால் அவர்களோ, நிதி என்று வாயெடுத்தாலே தேர்தல் வரட்டும் அண்ணே என்று ஓட்டம் பிடித்துள்ளார்கள். யாரும் தற்போது நிதியை கொடுக்க தயராக இல்லை என்பது தெரிய வந்ததையடுத்து கட்சி தலைவர் ஸ்டாலின் அதிர்ச்சியில் உள்ளாராம்.

இந்நிலையில் இன்று வேலூரில் செய்தியாளர்களை துரைமுருகன் சந்தித்தார். அப்போது திமுக என்பது கட்டுப்படாமல் பொருளாளராக இருந்த MGRயை விலக்கிய கட்சி. அதனால் கட்சிக்கு ஒத்துழைக்க மறுக்கும் எவராக இருந்தாலும் மாற்றங்கள் நடவடிக்கை இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் நிதி தராமல் தாமதம் செய்து வரும் திமுக நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளார்களாம்.