இந்தோனேசியாவின் மத்திய பகுதியில் இன்று 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் எதிரொலியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
முன்னதாக, இந்தோனேசியாவின் வடக்கு பகுதியில் உள்ள சுலசேசி தீவின் மத்தியில் உள்ள டோங்காலா நகரில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.அதிக மக்கள் வாழும் Sulawesi பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
மத்திய Sulawesi மற்றும் Sulawesi சுலவேசி மாகாணங்களில் உள்ள மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்களை அந்த பகுதிகளை விட்டு வெளியேறும்படி புவிசார் மற்றும் வானிலை அவதான நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால், எச்சரிக்கை பின்னர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நில அதிர்வு அச்சம் தொடர்பில் தொலைக்காட்சியில் செய்தி பார்த்தவர்கள் அந்தப் பிரதேசங்களை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர்.Sulawesi நான்காவது பெரிய இந்தோனேசிய தீவாகும், மேலும் 18 மில்லியன் மக்கள் வசிக்கும் இடமாக இது உள்ளது.
இந்த நில அதிர்வு காரணமாக இதுவரையில் ஒருவர் உயிரிழந்த நிலையில் 10 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் பல வீடுகள் சேதமடைந்துள்ளது.எனினும், இந்த நில அதிர்வு காரணமாக, இலங்கைக்கு எதுவும் பாதிப்பு உள்ளதாக என்பது தொடர்பில் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.
புவியியல் அமைப்பின்படி நெருப்பு வளையம் என்றழைக்கப்படும் ஜாவா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் அவ்வப்போது பயங்கரமான நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது.
2004ம் ஆண்டு ஜாவா, இந்தோனேசியா பகுதியில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வு காரணமாக இலங்கை உட்பட பல நாடுகளில் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.