சென்னையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது இரண்டு குழந்தைகளையும் பாலில் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தன் கணவரையும் கொள்ள முயற்சித்த அபிராமி என்ற பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு நீதிமன்ற விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சிறையில் அபிராமியின் நடவடிக்கை குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
தன்னை குடும்பத்தில் இருந்து யாரும் ஜாமீன் எடுக்க வரவில்லை என்ற விரக்தியில் காணப்படுகிறார்.
தன் குடுபத்திலும், தன் கணவர் குடுபத்திலும் இருந்து ஒருவர் கூட தன்னை சிறைக்கு வந்து சந்திக்கவில்லை என்றும், முழுவதுமாக தன்னை ஒதுக்கி வைத்து விட்டதாகவும் கூறி சக கைதிகளிடம் புலம்பியுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறையில் சாப்பிடாமல் மயங்கி விழுந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மீண்டும் சரிவர சாப்பிடாமல் இருந்து வருகிறார்.
முன்னர் அபிராமியிடம் முகம் கொடுத்து பேசி வந்த சக கைதிகள், இப்போது மெல்ல மெல்ல புறக்கணிக்க துவங்கி விட்டனராம்.
இதனால் குடும்ப ஆதரவும் இல்லாமல், தனக்கு ஆறுதல் சொல்லவும் ஒருவரும் இல்லாமல் சிறையில் பித்துப்பிடித்தது போல சுற்றி வருகிறாராம்.