ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் நேற்று முன்தினம் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. இந்த தொடரில் இதுவரை தோல்வியே சந்திக்காத இந்திய அணி இறுதிப்போட்டிக்கு ஏற்கனவே தகுதிபெற்று இருந்தது.
இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டியானா அந்த ஆட்டம் அபுதாபியில் நடைபெற்றது. அதில் வங்கதேச அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது.
வங்கதேச அணி மூன்றாவது முறையாக ஆசியக்கோப்பை பைனலுக்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி 7 ஆவது முறையாக கோப்பியை கைப்பற்றும், முயற்சியில் இறங்கியுள்ளது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் கடந்த போட்டியில் ஆடாத ஐந்து வீரர்களும் அணியில் இடம்பிடித்துள்ளார்கள். இதனால் மீண்டும் சிறப்பாக விளையாடிய ராகுலுக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது.