ஸ்டாலின் அப்போலோ போன நேரம் பார்த்து நடந்த சம்பவம்..!

வெளியில் அழகிரி தரப்பில் இருந்து திமுக சில பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், அடுத்து கட்சிக்குள்ளயே வெடித்துள்ள உட்கட்சி பூசலை எப்படி சமாளிக்க போகிறது என்று தெரியவில்லை.

கடந்த சில நாட்களாக சிறுநீரக தொற்று சிகிச்சையின் காரணமாக ஓய்வில் இருந்து வருகிறார் ஸ்டாலின். இந்த நேரத்தில் கட்சிக்குள் நிலை கைமீறி சென்று கொண்டிருக்கிறது.

முதலில் கழக பேச்சாளர்கள் சரிவர கட்சியில் ஈடுபாடு காட்டவில்லை என்ற புகார் எழுந்த நிலையில், இப்போது பிறருக்கு துதி பாடும் வேலையில் இறங்கி விட்டனர்.

எதிர்பார்த்த பதவி கிடைக்காமல் திமுக முக்கிய நிர்வாகிகள் சிலர் அதிருப்தியில் இருந்த நிலையில், இப்போ அந்த லிஸ்டில் திருச்சி சிவாவும் இணைந்துள்ளாராம்.

உடல் நல குறைவின் காரணமாக ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நாடாளுமன்றத்தில் முக்கியமான பதவி காலியாகியுள்ளது.

அதற்கு தன் பெயரை முன்மொழிய சொல்லி திருச்சி சிவா கேட்டிருக்கிறார். `அரசாங்கத்தில் நாம் பங்கெடுக்க வேண்டாம்’ என்று ஸ்டாலின் தரப்பில் இருந்து பதில் வந்துள்ளது.

போட்டியிட்டிருந்தால் நிச்சயம் வென்றிருக்கலாம். ஸ்டாலின் சொன்ன வார்த்தைக்காக பின்வாங்கி விட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் கோபத்தில் எல்லாவற்றையும் தூகிஎறிந்து விட்டு பழைய படி எதுவும் கேக்காமல் அமைதியாகிவிட்டாராம் திருச்சி சிவா.