தகாத உறவு குற்றமில்லை என்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்தின் மீதான பயத்தை போக்கிவிடும் என்று பிரபல நடிகையான லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நேற்று உச்சநீதிமன்றம் தகாத உறவு குற்றமில்லை என்று அதிரடி தீர்ப்பு வழங்கியது. இது குறித்து பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து பிரபல திரைப்பட நடிகையும், இயக்குநருமான லட்சுமி ராமகிருஷணன், இந்திய சமூகம் இனி சட்டத்தின் மீது எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை சுய கட்டுப்பாடு மட்டும் கொண்டிருந்தால் போதும் என்பது போன்ற இந்த தீர்ப்பு கவலை அளிக்கிறது.
நாம் சமுத்துவத்தை பேசினோம் என்றால் இதுபோன்ற விவகாரங்களில் ஆண் பெண் பேதமின்றி இருவருமே பொறுப்பாளியாக்கப்பட வேண்டும்தானே.
திருமண உறவு சந்ததிகளின் நலனை பேணும் உறவு. இதில் திருமண பந்தத்துக்கு மீறிய உறவு புரையோடினால் அடித்தளமே ஆட்டம் காணும்.
பாலியல் உறவில் சுய கட்டுப்பாடும், சுய ஒழுக்கமும் மட்டுமே கட்டுப்பாட்டு வேலியாக இருக்கும் என்று கூற முடியாது.
சட்டத்தின் மீதான பயம்தான் இன்னமும் நிறைய குடும்பங்களை உயிர்ப்புடன் வைத்திருப்பதோடு குழந்தைகளையும் பாதுகாக்கிறது.
சுய கட்டுப்பாடு, சுய ஒழுக்கமே போதும் என்ற நிலைப்பாட்டுக்கு வரும் அளவுக்கு நம் சமூகம் இன்னும் முதிர்ச்சியடையவில்லை.
மேலும், திருமணத்துக்கு அப்பாற்பட்ட உறவு தனிநபர் விவகாரம் அல்ல. இது குழந்தைகளை பாதிக்கும்.
சட்ட வல்லுநர்களுக்கு ஒரு கோரிக்கை விடுக்கிறேன். ஜனநாயக நெறியைப் பின்பற்றி தனிநபர் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீர்ப்பு வழங்கியிருக்கிறீர்கள்.
ஆனால், கள நிலவரம் என்னவென்றால் சட்டத்தின் மீதான் பயம் மட்டுமே குழந்தைகளை பல்வேறு பிரச்சினைகளில் இருந்தும் காக்கக் கூடிய ஒரே ஆயுதம் என்று கூறியுள்ளார்.