விடுதலை புலிகளுக்கு அஞ்சி ஓடினேன்! – மைத்திரி

2009 இல் இறுதிக்கட்டப்போர் இடம்பெற்றவேளை விமானம் மூலம் கொழும்பு நகரை விடுதலைப்புலிகள் தாக்குவார்கள் என தெரிந்து கொண்டதால் அச்சம் காரணமாக கொழும்பு நகரைவிட்டு வேறு இடத்தில் தான் தங்கியிருந்ததாக சிறிலங்கா அரசதலைவர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வாழும் இலங்கையர்களை நியூயோர்க்கில் சந்தித்து கலந்துரையாடிய போதும் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அந்த சந்திப்பில் அவர் மேலும் குறிப்பிட்ட விடயங்கள் இவை…

சென்னையில் இருந்தோ அல்லது வேறுஏதோ காட்டுப்பகுதியில் இருந்தோ விமானத்தை இயக்கி கொழும்பு நகரைத் தாக்க விடுதலைப்புலிகள் திட்டமிட்டிருந்தனர்,

இந்த விவரங்கள் என்னைத் தவிர வேறுயாருக்குமே தெரியாது

விடுதலைப்புலிகளின் வான் தாக்குதலுக்கு அஞ்சி அப்போது அரசதலைவராக இருந்த மகிந்த ராஜபக்ஷ, மற்றும் பிரதமர் ஆகியோர் எங்குச் சென்றார்கள் எனக்கூடத்தெரியவில்லை.

நான்தான் பாதுகாப்புத்துறையை மேலதிகமாக கவனித்துவந்தேன்.

2009 மே மாதத்தின் கடைசி இரு வாரங்களில் விடுதலைப்புலிகளின் தாக்குதல் தீவிரமாக இருந்ததால் அவர்கள் அமைச்சர்களின் வீடுகளையும், அமைச்சர்களையும் குறிவைத்து தாக்குவார்கள் என அச்சம்கொண்டோம்.

நாட்டில் உள்ள அனைத்துத் தலைவர்களையும் நாட்டை விட்டு வெளியே பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைத்தேன். இது இதுவரை யாருக்கும் தெரியாத ரகசியம்.

2007-ம் ஆண்டு வான்புலிகள் விமானம் மூலம் கொழும்பு விமான நிலையத்தைத் தாக்கி இருப்பதால் அவர்கள் கொழும்பை சுலபமாக தாக்குவார்கள் எனத் தெரியும். ஆனால், விமானம் எங்கிருந்து பறந்துவரும் என்பது எங்களுக்குத் தெரியவில்லை.

எனினும் சென்னையில் இருந்து அல்லது வேறுஏதோ காட்டுப்பகுதியில் இருந்தோ விமானம் மூலம் கொழும்பு நகரை விடுதலைப்புலிகள் தாக்கதிட்டமிட்டுள்ளார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

இதனால் நானும்கூட கொழும்பு நகரில் தங்கவில்லை. நகரைவிட்டு வேறு இடத்தில் தங்கி நிலவரங்களைக் கவனித்தேன். ஏன சிறிசேனா தெரிவித்திருக்கிறார். அவர் இவ்வாறு அமெரிக்காவில் குறிப்பிட்ட விடயங்கள் புதிய பரபரப்புக்களை கிளப்பியுள்ளது.