சோழர் காலத்தில், புதைக்கப்பட்ட புதையலா? வீராணம் ஏரியில், காற்றுக் குழிழ்கள் வெளியேற்றம்….! பரபரப்பாகி உள்ள மக்கள்…!
கடலுார் மாவட்டம், காட்டு மன்னார் கோவில் அருகே, வீராணம் ஏரி அமைந்துள்ளது. கடல் போல், கண்ணுக்கெட்டிய துாரம் வரை தண்ணீர், இந்த ஏரியில் பரவிக் காணப்படுகிறது. பார்ப்பதற்கு கடல் போலத் தோற்றமளிக்கிறது, இந்த ஏரி்.
இந்த ஏரியில் கரைக்கு சற்றுத் தள்ளி உள்ள தண்ணீர் இருக்கும் இடத்தில் இருந்து கடந்த நான்கு நாட்களாக, தண்ணீர் கொப்பளித்துக் கொண்டு வருகிறது. இதனை அதிசயமாகக் கண்ட மக்கள், பெருந்திரளாக, இந்தக் குமிழ்களைப் பார்த்துச் செல்கின்றனர்.
தமிழகத்தில், சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தான், விவசாயத்திற்காக, இந்த வீராணம் ஏரி உருவாக்கப் பட்டது. அந்த சமயம், இந்த ஏரியில், தங்க ஆபரணங்கள், தங்க காசுகள் உள்ளிட்ட பொருட்கள், இந்த ஏரியில் புதைத்து வைக்கப் பட்டதாக, ஒரு செய்தி பரவிக் கொண்டே இருக்கிறது.
புதையல் இருப்பதாக, அந்தப் பகுதி மக்கள் குறிப்பிட்ட இடத்தில் இருந்து தான், தண்ணீர் கொப்பளித்து, காற்றுக் குமிழ்கள் வெளியேறிக் கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டும், இந்த இடத்தில், நீர்க்குமிழ்கள் வந்து கொண்டிருந்தன.
அந்த இடத்தில், மணல் மூடைகளை வைத்து, அடைத்தும், அதையும் மீறி, இந்தக் குமிழ்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இங்கு புதையல் இருப்பதாக நம்பப் படுவதால், ஏராளமான மக்கள், இந்த ஏரியை வந்து பார்த்த வண்ணம் உள்ளனர்.