விஜயலட்சுமியின் கணவர் தனது ஆசைமனைவிக்காக போட்ட உருக்கமான பதிவு.!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ் 2 . இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் தற்போது 12 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி, ஐஸ்வர்யா ஆகிய நால்வர் மட்டும் இறுதி கட்டத்தில் உள்ளனர் .

இதில் யார் மக்களின் மனங்களை வென்ற அந்த போட்டியாளர் என்பது நாளை தெரிந்துவிடும்.

இந்நிலையில் விஜயலட்சுமியின் கணவர் பெராஸ் தனது மனைவி விஜயலக்ஷ்மி தன்னை விட்டு பிரிந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று 50 நாட்களை கடந்துவிட்டதை எண்ணி உருக்கமாக ஒரு புகைப்படத்தை போட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் விஜயலட்சுமியும் அவரது மகன் நிலனும் சேர்ந்து இருக்கும் படத்தை போட்டுள்ள பெரோஸ், ‘நிலன் உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். உன் அம்மாவை ரொம்ப பிடிக்கும். நான் அவளை ரொம்பே மிஸ் பண்றேன்’ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இதற்கு கவலைப்பட வேண்டாம் , இன்னும் இரண்டு நாளில் உங்கள் மனைவி வந்துவிடுவார் என்று ரசிகர்கள் ஆறுதல் கூறி பதிவிட்டு வருகின்றனர்.