பாகிஸ்தானுக்கு எதிராக 2 ஆவது “சர்ஜிகல் ஸ்டைரக்” நடத்திய இந்தியா ..! வெளியான திடுக்கிடும் தகவல்…!!

கடந்த 18ம் தேதி எல்லை பாதுகாப்புப் படை வீரர் நரேந்திர சிங் அவர்கள் தனது தோட்டத்திற்கு பயிர்களை கவனிக்க சென்றபோது, அவரை பாகிஸ்தான் ராணுவத்தினர் கடத்திச் சென்று, அவரை சித்ரவதை செய்து படுகொலை செய்தனர். அவர் உடல் சிதைவுற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் இந்திய ராணுவத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாகிஸ்தானுக்கு உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ராணுவ தலைமைத் தளபதி பிபின் ராவத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசுகையில்,

3 நாட்களுக்கு முன்பு மிகப்பெரிய சம்பவம் ஒன்று நடந்து இருக்கிறது. அது என்னவென்று இப்போதைக்கு கூற முடியாது என்னை நம்புங்கள். எதிர்காலத்தில் என்ன நடக்க போகிறது என்பதை நீங்கள் பார்க்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

இதனிடையே காஷ்மீரில் பாகிஸ்தான் படைகள் மீது 6 இடங்களில் இந்திய ராணுவத்தினர் அதிரடித் தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராணுவ வீரர் நரேந்திர சிங்கை சித்ரவதை செய்து கொன்ற பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி தரப்பட்டுள்ளது என்றும் இதில் பாகிஸ்தானுக்கு கடும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கக் கூடும் என்றும் இந்திய ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.