சண்டக்கோழி 2 டிரெய்லர் வெளியிடப்பட்டது. படத்தில் விஷால் பஞ்ச் வசனம் பேசி இருப்பது தெரிய வந்ததுள்ளது.
நடிகர் விஷாலின் 25வது படமான சட்டக்கோழி 2 படம் அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
லிங்குசாமி இயக்கத்தில் தயாரான இந்த படத்தில் விஷால், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், வரலட்சுமி சரத்குமார் சதீஷ், சூரி, ஹரீஷ் பேரடி, அப்பானி சரத், ஹரீஷ் சிவா உள்பட பலரும் நடித்துள்ளனர். உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தில் வில்லியாக வரலட்சுமி நடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.
ஏற்கனவே இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது டிரெய்லர் வெளியிடப்பட்டு உள்ளது. படம் ஆயுத பூஜையன்று வெளியிட திட்ட மிட்டப்பட்டு உள்ளது.